இறை உறவில் மலர்ந்திடுவோம்
இறை உறவில் மலர்ந்திடுவோம் இணைந்து வாருங்கள்
இனிய தேவன் தந்த பலியில் மகிழ்ந்து கூடுங்கள் -2
வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள் -2
- உதயமாகும் இனிய உறவு வாருங்கள்
உலகில் சென்று பலன் தரவே கூடுங்கள் – 2
பகிரும் உள்ளம் நாம் பெறுவோம் வாருங்கள் – 2
நாம் பரமன் அன்பில் வாழ்ந்திடுவோம் கூடுங்கள் – 2
வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள் – 2
- சுமை மறந்து சுகம் பெறுவோம் வாருங்கள்
இமை திறந்து விடியல் காணக் கூடுங்கள் – 2
இருள் மறைந்து ஒளி நிறையும் வாருங்கள் – 2 நாம் அருள் வாழ்வில் மகிழ்ந்திடுவோம் கூடுங்கள் – 2
வாருங்கள் வாருங்கள்….
No posts found
