🔉♬கைவிடாத கடவுளே♬

கைவிடாத கடவுளே ஐயமின்றி நம்பினேன்
கையறுந்த நிலையிலே உம்மை கூவி அழைக்கின்றேன் – 2
புகலிடம் நீயே என் அடைக்கலம் நீயே
உன் பாது காப்பின் நிழலில் நானும் தங்கி மகிழ்ந்து
வாழ்வேன் நாளும் -கைவிடாத

1. வேடரின் கண்ணியும் கொன்றழிக்கும் நோய்களும்
என்னை என்ன செய்திடும் -2
இரவு நேர திகில்களும் பகலில் பாயும் அம்பும்
அச்சம் தந்திட இயலுமோ- 2
உண்மை கேடயமாய்
வாய்மை கவசமுமாய் – 2
உன்னதர் உந்தன் உறைவிடம்
நாடிவந்தேன் தெய்வமே
சிறகுகள் அரணாக இறகுகள் புகலாக
அரவணைத்து காத்திடும்
அன்பு தெய்வமே – 2

2. தீமை ஏதும் நேராமல் வாதை என்னை நெருங்காமல்
தூதர் சூழ சொல்கிறீர் – 2
கல்லின் மேல் கால் மோதாமல்
செல்லும் இடமெல்லாம் காக்கின்றேர்
கைகளாலே தாங்குவீர் – 2
தேவையின் வேளையில் தேடிவந்தேன் தெய்வமே- 2
வேண்டலுக்கு பதில்தாரும்
துன்ப நேரத்தில் துணையாகும்
நீடிய ஆயுளும் அமைதி நிறைந்த வாழ்வையும்
மீட்பாய் எனக்கு அருளுமே
அன்பு தெய்வமே -2

Cm Fm E♭ Fm E♭
கைவிடாத கடவுளே ஐயமின்றி நம்பினேன்
E♭ Fm Cm
கையறுந்த நிலையிலே
E♭ Cm Fm
உம்மை கூவி அழைக்கின்றேன்
A♭ Fm Fm A♭ E♭
புகலிடம் நீரே என் அடைக்கலம் நீரே
E♭ Fm E♭
உன் பாதுகாப்பின் நிழலில் நானும்
C# Fm
தங்கி மகிழ்ந்து வாழ்வேன் நாளும்

Fm A♭
வேடரின் கண்ணியம் கொன்றழிக்கும் நோய்களும்
C# B♭ Fm
என்னை என்ன செய்திடும் – 2
C# E♭ A♭ C# E♭ A♭
இரவு நேரத் திகில்களும் பகலில் பாயும் அம்பும்
A♭ Ef
Cm Fm
அச்சம் தந்திட இயலுமோ – 2
Fm C# Fm A♭
உண்மை கேடயமாய் வாய்மை கவசமுமாய் – 2
B♭ Cm
உன்னதர் உந்தன் உறைவிடம்
Fm E♭ C#
நாடி வந்தேன் தெய்வமே
Dm B♭ Dm B♭
சிறகுகள் அரணாக இறகுகள் புகலாக
C# E♭
அரவணைத்துக் காத்திடும்
Fm Cm
B♭ Cm
அன்பு தெய்வமே – 2

Scroll to Top