பண்பில்
அன்பாகி
அமைதியாகி
குளிர்ச்சியாகி
குணத்தில் சக்தியாகிய
கலைநயமாகி
படைப்பாளியாகி
லட்சியத்தில்ஆழம்பதித்து
நேர்மறை எண்ணத்தில் வேரூன்றி
சமூக நல்லிணக்கம் மிக்கும்
இலக்கண விதியில்
பகுதி விகுதியில்
இருபாக பெயர்ச்சொல்லாகி
ஆகுபெயரில் பண்பாகுபெயராகி
இலக்கியத்தில்
மருதநிலத்தலைவனாகி
குறிஞ்சிநில மகளிர் கொய்து
குவித்து விளையாடிய
99 மலர்களில் (வகுளம் – மகிழம் பூ) ஒன்றாகி
இலை பூ காய் பழம் பட்டை
மருத்துவ குணமாகி
அழகும் நறுமணமும் மிகுந்த
இருவித்திலை தாவரமாகி
நிழல் தரும் மரமாகி
மணத்தால் மகிழ்விக்கும்
மகிழம் பூ போன்று
மகிழ்ச்சிக்குரியவனே மகிழன்💐💐💐💐💐
